கர்நாடக எல்லையில் மதுபானம் வாங்கிய ஒசூர் தமிழர்கள்

By செய்திப்பிரிவு

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து, கர்நாடகாவில் 42 நாட்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் நேற்றுகாலை 7 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுப் பிரியர்கள் அதிகாலை முதலே மதுக் கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

பெங்களூருவில் மதுக் கடைகளின் முன்பாக கூட்டம் அலைமோதியதால் பெண்களுக்கு என தனி வரிசை ஒதுக்கப்பட்டது. அதனால் ஆண்களும், பெண்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையாகநின்று பைகளில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல், அத்திப்பள்ளி ஆகிய பகுதிகளில்கூட்டம் அலை மோதியது. ஒசூர், கிருஷ்ணகிரியில் இருந்துஏராளமானோர் அங்கு குவிந்ததால் வாடிக்கையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி சரி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்