ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் தொற்று எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 524 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1,093 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே மேற்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூரு பகுதியில் நேற்று ஒடிசா, மேற்குவங்கம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த300-க்கும் மேற்பட்ட மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசின் அனுமதி கிடைத்ததும் உங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் என போலீஸார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தொழிலார்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றம் நிலவியது. என். மகேஷ்குமார்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago