மும்பை கல்லறையில் நீடிக்கும் சிக்கல்: உயிரிழந்த உடல்களைப் புதைப்பதால் கரோனா பரவாது: உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு வாதம்

By ஐஏஎன்எஸ்

வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் அவர்கள் உடலை புதைப்பதால் கரோனா பரவாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு வாதிட்டது; இவ்வழக்கை மும்பை நீதிமன்றம் இரு வாரங்களில் முடிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்திவுள்ளது.

மும்பையில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 343ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒரு நகரத்தில் மட்டும் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 8,713 பேர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பில் இறந்த உடல்களை 12 மணிநேரத்தில் அப்புறப்படுத்தப்படவேண்டுமென மகாராஷ்டிரா அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் மருத்துவமனையிலிருந்து அப்புறப்படுத்தினாலும் அந்த உடல்களை அடுத்ததாக என்னசெய்வது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

காரணம் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உடல்களை புதைப்பதால் வைரஸ் மீண்டும் பரவும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனாலேயே பாந்த்ரா வெஸ்டில் உள்ள கல்லறை வாசலில் கரோனா பாதிக்கப்பட்ட உடல்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றன.‘

கரோனா பாதிக்கப்பட்ட உடல்களை மும்பை பாந்த்ரா வெஸ்ட் கல்லறையில் புதைக்கக்கூடாது என மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பாந்த்ரா வெஸ்டில் வசிக்கும் காந்தி, அவரது வேண்டுகோளை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் ஏப்ரல் 27 உத்தரவுக்கு எதிராக இடைக்கால கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிரதீப் காந்தியின் மனுவின்மீது தலையிடக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது.

நீதிபதிகள் அமர்வு ஆர்.எஃப். நரிமனும் இந்திரா பானர்ஜியும் காணொலி வாயிலாக மூலம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்,

பிரதீப் காந்தி வழக்கறிஞர் உதயாதித்யா பானர்ஜி மூலம் உச்ச நீதிமன்றத்தை நாடினார். பிரதீப் காந்தி சார்பாக வழக்கறிஞர் தனது வாதத்தின் போது கூறுகையில்,

''தற்போதைய முன்னோடியில்லாத சுகாதார நிலைமையில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் மத உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். புதைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட உடல்களில் இருந்து மண் மற்றும் நிலத்தடி நீர் வழியாக நோய்த்தொற்று பரவாது என்பதை நிரூபிக்க எந்த ஆராய்ச்சியும் இல்லை. இந்த கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்றாலும், நோய்க்கு தடுப்பூசி இல்லாத அசாதாரண காலங்களில், ஒருவரின் கவனக்குறைவு குறித்து பின்னர் வருத்தப்படுவதை விட ஒருவரின் செயல்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம் ஆகும். எனவே, பாந்த்ரா வெஸ்டில் உள்ள கல்லறையில் கோவிட் -19 நோயாளிகளை அடக்கம் செய்தால் நிச்சயம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வைரஸ் வெடிக்கும்'' என்று வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த மனுவில் தலையிடக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்தும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது.

இந்த விஷயத்தில் தலையிட முஸ்லீம் அமைப்பு தனது வாதத்தின்போது கூறுகையில், ''கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவுவது தொடர்பான அச்சம் ஆதாரமற்றது. உயிரிழந்த உடலை அடக்கம் செய்யும் போது எந்த ஆபத்தும் இல்லை என்பதை வலியுறுத்துகிறோம். இறந்த உடல்களை அடக்கம் செய்வது இஸ்லாத்தின் மதத்திற்கு இன்றியமையாதது, இது கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களின் இன்றியமையாத நடைமுறையாகும். அத்தகைய உரிமை அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் ஒருவரின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும்.

இவ்வாறு ஜமியத் உலமா-இ-ஹிந்தும் முஸ்லிம் அமைப்பு தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் காணொலி வாயிலாக கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு ஆர்.எஃப். நரிமனும் இந்திரா பானர்ஜியும் மீண்டூம் மும்பை நீதிமன்றமே இதனை இரு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டுமென உத்தரவிட்டனர்.

இடைக்கால உத்தரவு நிறைவேற்றப்பட்டதிலிருந்து வாய்வழியாக அனுசரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாநில அரசோ அல்லது மும்பை மாநகராட்சியோ தங்கள் தரப்பில் இதற்கு எந்தவொரு பிரமாணப் பத்திரமும் வழங்கவில்லை எனப்தை சுட்டிக்காட்டினர். எனவே மும்பை உயர்நீதிமன்றமே இந்த மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிவு செய்வது பொருத்தமானது என்று தெரிவித்தனர்.

மும்பையின் பாந்த்ரா மேற்கில் உள்ள கல்லறைகளில் கோவிட் -19 நோயாளிகளின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து இடைக்கால தடைமீதான இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிவு செய்யுங்கள் எனவும் உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்