கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக 2.22 கோடி கவசஉடைகளை வாங்க மத்திய அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதில்1.43 கோடி கவச உடைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன.
நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருக்குத் தேவையான 2.22 கோடி தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள், கருவிகளை (பிபிஇ) வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 1.43 கோடி எண்ணிக்கையிலான கவச உடைகள், கருவிகளை உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்பவர்ட் குரூப்-3 குழுமத்தின் தலைவர் பி.டி.வகேலா கூறும்போது, “நாட்டில் தற்போது 19,398 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 60,884 செயற்கை சுவாசக் கருவிகளை வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 59,884 கருவிகள் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படவுள்ளன.
மேலும் 2.49 கோடி எண்ணிக்கையிலான என்95, என்-99 ரக முகக் கவசங்கள் வாங்கப்படவுள்ளன. இதில் 1.49 கோடி முகக் கவசங்கள் உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் வாங்கப்படவுள்ளன.
கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைஉற்பத்தி 12.23 கோடியிலிருந்து 30 கோடியாக (மாதத்துக்கு) அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago