மத்தியப் பிரதேச மாநிலம், பண்ணா வைரச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப் படும் வைரங்களில் சில காணாமல் போவது தொடர்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அன்றி தனிப் பட்ட விசாரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட் டுள்ளதாக கூறப்படுகிறது.
பண்ணா மாவட்டப் பகுதியில் தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனம் சார்பில் வைரம் தோண்டி எடுக்கப் படுகிறது. இதற்காக அப்பகுதியில் சுமார் 550 சிறிய சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் வெட்டி எடுக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை வெளிச்சந்தையில் விற்பதோ அல்லது வாங்குவதோ தண்டனைக் குரிய குற்றமாகும். இங்கு கிடைக் கும் வைரங்கள் அரசிடம் சமர்ப் பிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு வெட்டி எடுக்கப்படும் வைரங்களில் சில தொடர்ந்து மர்மமான முறையில் காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாநில சட்ட அமைச்சரும் பண்ணா தொகுதி எம்எல்ஏ.வுமான குசும் சிங் மெஹ்திலே கடந்த 20-ம் தேதி முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “பண்ணா சுரங்கத்தில் நெல்லிக்காய் அளவிலான ரூ. 50 கோடி மதிப்புள்ள வைரம் சமீபத்தில் காணாமல் போயுள்ளது. அப்பகுதி காவல்துறை உதவியுடன் சுரங்க ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் இதனை மறைத் துள்ளனர். பண்ணாவில் வெட்டி எடுக்கப்படும் வைரம் அரசிடம் சமர்ப்பிக்கப்படாமல் காணாமல் போவது தொடர்கிறது. எனவே இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மாக அன்றி தனிப்பட்ட விசா ரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பண்ணாவில் வைரம் எடுப்பதற் காக 8 அடிக்கு 8 அடி சதுர அளவு களில் சுரங்கங்கள் வெட்டப்படு கின்றன. இந்தப் பணி பல தனியார் களுக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. இவர்களிடம் பணியாற்றுவோர் பணிமுடிந்துச் செல்லும்போது, அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வும் வைரங்கள் திருட்டு சமீப காலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இப்பகுதிவாசியான அனந்த்சிங் என்பவர் வேலி இல்லாத பகுதியில் 13.93 காரட் வைரக்கல்லை கடந்த ஆண்டு கண்டெடுத்து அரசிடம் ஒப் படைத்தார். அது ஏலம் விடப்பட்ட போது ரூ. 26 லட்சத்துக்கு விலை போனது. இவ்வாறு ஒப்படைக்கப் படும் வைரக்கற்களும் சில நேரங்களில் அரசிடம் போய்ச் சேர்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பண்ணா சுரங்கப் பணியாளர்கள் வட்டாரம் கூறும்போது, “இந்தப் பகுதியைச் சேர்ந்த ராகுல்சிங் என்ப வர் கடந்த ஜுன் 25-ம் தேதி இந்தப் பகுதியில் 80 காரட் வைரக்கல் ஒன்றை கண்டெடுத்தார். அரசிடம் ஒப்படைப்பதாகக் கூறி அதை ஓர் ஒப்பந்ததாரரின் பணி யாளர் பெற்றுக்கொண்டார் ஆனால் அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்” என்றனர்.
பண்ணாவில் உள்ள கனிமவள சுரங்கங்களால், அதன் அருகி லுள்ள தேசிய புலிகள் சரணாலயத் துக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதிய உச்ச நீதிமன்றம் அனைத்து சுரங்கப் பணிகளையும் அடுத்த ஆண்டுக்குள் நிறுத்த உத்தர விட்டது. இதற்கு எதிராக தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், அப் பகுதியில் மில்லியன் காரட் மதிப் புள்ள வைரங்கள் வரை இருப்பதால் 2020-ம் ஆண்டு வரை அனுமதி அளிக்கும்படி கேட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago