கரோனா வைரஸ் பரப்பியதற்கு தப்லீக் ஜமாத் அமைப்பினரும் ஒரு காரணம்; நடவடிக்கை எடுக்கப்படும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

By பிடிஐ

நாட்டில் கரோனா வைரஸ் பரப்பியதற்கு தப்லீக் ஜமாத் அமைப்பினரே காரணம். கரோனா வைரஸ் உடலில் தொற்றியது குற்றமல்ல, அதை மறைத்ததுதான் குற்றம் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் மதவழிபாடு மாநாடு நடந்தது. இதில் நாடுமுழுவதிலிருந்து 9ஆயிரத்துக்கும் அதிகமானோரும், வெளிநாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றேனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபின் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மருத்துவர்கள், போலீஸார் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததால் அப்புறப்படுத்தினர். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் ஏராளமானோருக்கு கரோனா இருப்பது உறுதியானது.

இதைத் தொடர்்ந்து நாடுமுழுவதும் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்ேகற்றவர்களைக் கண்டறிந்து பரிசோதித்தபோது பலருக்கும் கரோனா இருந்ததும், அவர்கள்மூலம் பலருக்கும் பரவியது கண்டறியப்பட்டது. இதனால் கரோனா வைரஸ் பரப்பியதற்கு தப்லீக் ஜமாத் அமைப்பினரே காரணம் என சமூக ஊடகங்களில் அவதூறுப்பிரச்சாரம் நடந்தது. மேலும், கரோனா வைரஸ் பரவியதற்கு குறிப்பிட்ட சமூகத்தை காரணமாகக் கூறக்கூடாது என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர், இதற்கு மதச்சாயம் பூசவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது தப்லீ்த் அமைப்பினர் குறித்து ேகள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதல்வர் ஆதித்தயநாத் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவிய விவகாரத்தில் தப்லீக் ஜமாத் அமைப்பினர் நடந்து கொண்டு விதம் கண்டிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது நாட்டில் பல்ேவறு பகுதிகளில் கரோனா பரவியதற்கு அவர்களும் ஒரு காரணம். கரோனா வைரஸ் நோய் ஏற்பட்டது குற்றம் அல்ல, அதைமறைக்க முயன்றார்களே அதுதான் குற்றம். குற்றத்தை மறைத்தமைக்காக நடவடிக்கை எடுக்கப்படும். தப்லீஸ் ஜமாத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் இந்த குற்றத்தைச் செய்தார்கள்.

அவர்கள் உடலில் கரோனா வைரஸ் இருந்ததை அவர்கள் மறைக்கவில்லையா, அதை உடலில் சுமந்துதானே சென்றார்கள். இல்லாவிட்டால் தொடக்கத்திலேயே மிகப்பெரிய அளவில் கரோனாவை தடுத்திருக்கலாம்” எனத்தெரிவி்த்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்