ஹரியாணாவில் விஸ்கி குடிக்கும் எருமை- பராமரிப்புக்கு தினமும் ரூ.3,000 செலவு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியாணாவில் முர்ரே இன எருமைக் கிடாவை நரேஷ் குமார் என்பவர் வளர்த்து வருகிறார். இதற்கு 'சுல்தான்' என பெயரிட்டுள்ளார். பிற எருமைக் கிடாவை விட இது இரு மடங்கு எடை கொண்டதாக (ஒன்றரை டன்) உள்ளது. மேலும் 5 அடி 11 அங்குலம் உயரமும் 14 அடி நீளமும் கொண்டது.

இதுகுறித்து நரேஷ் குமார் கூறும்போது, “நம் நாட்டில் உள்ள எருமைகளில் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்டது சுல்தான். மேலும் நாட்டிலேயே அதிக பராமரிப்பு செலவு கொண்ட எருமையும் இதுதான். இதற்கு தினமும் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரை செலவிடுகிறோம். ஒரு நாளைக்கு இதற்கு 10 லிட்டர் பால், 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட், 10 கிலோ தானியங்கள், 10-12 கிலோ பசுந்தழைகள் கொடுக்கிறோம். காலை, மாலை இரு வேளையும் 5 கி.மீ. நடக்க வைக்கிறோம். இரவில் ஒரு பாட்டில் விஸ்கி கொடுக்கிறோம்” என்றார். இந்த எருமைக் கிடாவின் விந்துவுக்கு நாடு முழுவதும் கிராக்கி உள்ளது. ஒரு டோஸ் விந்து ரூ.300-க்கு நரேஷ் குமார் விற்பனை செய்கிறார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் ஈட்டுகிறார். எருமைக் கிடா போட்டிகளில் ‘சுல்தான்’ பங்கேற்று 7 முறை பரிசு வென்றுள்ளது. இந்த எருமையின் மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்