லாக் டவுன் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக 2-வது கட்ட பொருளாதார நிதித்தொகுப்பு குறித்து பிரதமர் மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமல்லாது உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சக்கின் முக்கிய அதிகாரிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பொறுப்பு அதிகாரிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசித்தார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து லாக் டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த லாக் டவுன் காலத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த மாதம் 26-ம் தேதி ரூ.1.77 லட்சம் கோடி மதிப்பில் முதல் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2-ம் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை நேற்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கவில்லை. மேலும், ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் விவரங்களும் வெளியிடவில்லை.
» ஊரடங்கை பயன்படுத்திக் கொள்ளும் ரயில்வே: நீண்டகாலம் கிடப்பில் இருந்த பணிகள் வேகமாக முடிப்பு
இந்த விவரங்கள் அனைத்தையும் விரிவாகத் தெரிவிக்க பிரதமர் மோடியுடன் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது விைரவில் அறிவிக்க இருக்கும் 2-வது கட்ட பொருளாதார நிதித்தொகுப்பு குறித்தும் பேசப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி கடந்த இரு நாட்களாக தொழிலாளர் நலத்துறை, விமானப் போக்குவரத்துத் துறை, மின்சாரம், வர்த்தகத்துறை, சிறு, குறுந்தொழில் நலத்துறை ஆகிய அமைச்சர்கள், முக்கிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இன்று நிதியமைச்சர் நிர்மலா கலந்து ஆலோசித்தார்.
இந்த ஆலோசனையின் முடிவில் தொழிற்சாலை, நிறுவனங்களுக்கான 2-வது பொருளாதார நிதித்தொகுப்பு குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் வெளியிடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago