தெலங்கானாவில் சிக்கிய 1,239 ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அனுப்பிவைப்பு

By என்.மகேஷ்குமார்

தெலங்கானா மாநிலத்தில் சிக்கியிருந்த 1,239 ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதில் சிலர் பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்நிலையில், வாகனங்கள் மூலம் வெளி மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து, தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் சிக்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,239 தொழிலாளர்கள் நேற்று சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழிலாளர் தினத்தில் தாங்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மீதமுள்ள தொழிலாளர்கள் பேருந்து அல்லது ரயில் மூலம் சொந்த ஊர் திரும்ப விரைவில் ஏற்பாடு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் அனைவரும் சங்காரெட்டி மாவட்டம் கந்தி மண்டலத்தில் புதிதாக கட்டப்படும் ஐஐடி கட்டிட கட்டுமானப் திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். மேலும், மேற்கு வங்கம், பிஹார், ஒடிசாஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 2,464 தொழிலாளர்களும் தினக்கூலிகளாக பணியாற்றி வந்தனர்.

இதேபோல, குஜராத் மாநிலத்தில் பணியாற்றும் ஆந்திர மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அம்மாநில அரசு 42 பேருந்துகளை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த பேருந்துகள் நேற்று ஆந்திராவை வந்தடைந்தன. அப்போது அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்கி வரவேற்றனர்.

ஆந்திரா செல்ல வேண்டாம்..

தெலங்கானாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிஉள்ளது. இதேபோல ஆந்திராவிலும் 1,463 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டாமென தனது மாநில மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்