கரோனா தடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்; முக்கிய தகவல்கள்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கரோனா பாதிப்பை தடுக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* நாட்டில் அனைத்து மாவட்டங்களும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளன.

* புதிய பாதிப்புகள் கண்டறியப் பட்டுள்ள சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

* நோய்த் தொற்று பரவல் சங்கிலிப் பிணைப்பைத் தகர்ப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* பாதிப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கருத்தில் கொண்டு, கட்டுப்படுத்தப்படும் பகுதிகள் முறைப்படி எல்லை வரையறை செய்யப்பட வேண்டும்.பாதிப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கருத்தில் கொண்டு பூகோள ரீதியில் அது அமைய வேண்டும்;

* நன்கு குறியீடு செய்யப்பட்ட எல்லைகளாக இருக்க வேண்டும்; மற்றும் கட்டுப்பாட்டை அமல் செய்வதை உறுதி செய்ய உகந்ததாக இருக்க வேண்டும்.

* கட்டுப்படுத்த வேண்டிய பகுதிகள், நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளாக, மக்கள் கூடும் இடங்களாக, முனிசிபல் வார்டுகளாக அல்லது காவல் நிலையப் பகுதியாக முனிசிபல் மண்டலங்களாக, நகரங்களாக இருக்கலாம்

கிராமப் பகுதியாக இருந்தால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகள் கிராமம், கிராமங்களின் தொகுப்பு அல்லது காவல்

நிலையப் பகுதிகளின் குழு, கிராம பஞ்சாயத்துகள், ஒன்றியமாக இருக்கலாம்.

* கட்டுப்படுத்தப்படும் பகுதிகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையில் இடைமுகப் பகுதி ஒன்றும் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

* கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

* இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவினர் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தி, புதிய பாதிப்புகளைக் கண்டறிவதில் தீவிரம் காட்ட வேண்டும்.

* சாம்பிள் எடுப்பதற்கான வழிகாட்டுதல்களின்படி அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைகள், அவர்களின் தொடர்புகளைத் தடமறிதல் ஆகியவை செய்யப்பட வேண்டும்.

* இடைமுகப் பகுதியில் ILI/SARI பரிசோதனைகள் மூலம் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்