பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பிறர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ரயில்களை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைப்பயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.
தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. அந்த அடிப்படையில் தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகுள் தங்கள் மாநிலத் தொழிலாளர்களை அழைத்துவர சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தன.
இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ரயில்களை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
» புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகாவில் இருந்து செல்ல வேண்டாம்: எடியூரப்பா வலியுறுத்தல்
அந்த உத்தரவில் ‘‘ பல மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பிறர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ரயில்களை இயக்கலாம். அதேசமயம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் செல்லும்போது சமூகவிலகல் கடைபிடிக்கப்பட வேண்டும். உணவு உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் உறுதி செய்யப்ப வேண்டும். ஊர் திரும்புவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற தேவைகளை செய்ய மாநில அரசுகளும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago