கரோனா; பிளாஸ்மா சிகிச்சையை கைவிட மாட்டோம்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிளாஸ்மா சிகிச்சையை நாங்கள் கைவிட மாட்டோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த சிகிச்சையில் மலேரியாமற்றும் மூட்டு வலி பிரச்சினை களுக்கு தீர்வு அளிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை இடம்பெறுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் திடீரென்று கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரும் பயனளிக்காததால், சிகிச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லிதமிழகம் உட்பட சில மாநிலங்கள் இந்த சிகிச்சைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரியுள்ளன.

ஆனால் பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை என்பது இதுவரை உறுதி செய்யப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதற்கு ஒப்புதல் வரும் வரை பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

எனினும் ‘‘டெல்லியில் முதன்முதலில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 49 வயது நபருக்கு பலன் கிடைத்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்றே இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் சிகிச்சை அளிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சோதனை அடிப்படையில் மேற்கொள்ளும் இந்த முயற்சியை நாங்கள் கைவிட மாட்டோம்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்