கரோனா பாதிப்பு: மாநில வாரியாக சிவப்பு, பச்சை மண்டலங்கள் வெளியிட்ட மத்திய அரசு: தமிழகத்தில் எத்தனை?

By பிடிஐ

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட 2-ம் கட்ட லாக்டவுன் காலம் முடிவுக்கு வர இருக்கும் சூழலில் மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு , பச்சை மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி நாட்டில் மொத்தம் கரோனா இல்லாத 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் தமிழகத்தில் ஒரு மாவட்டம் மட்டுமே இருக்கிறது.

கரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருக்கின்றன.

நாட்டில் மொத்தமுள்ள சிவப்பு மண்டலங்களில் இரட்டை படை எண்ணி்க்கையில் உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் சிவப்பு மண்டலங்கள் உள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, சென்னை, பெங்களூரு,அகமதாபாத் ஆகியவை சிவப்பு மண்டலங்களில் இருக்கின்றன.

வரும் 3-ம் தேதியுடன் 2-வது கட்ட லாக்டவுன் முடிவுக்கு வருகிறது. ஆதலால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது தங்கள் மாநிலங்களில் உள்ள நிலை, மாவட்டங்கள் எந்தெந்தப்பிரிவில் இருக்கின்றன, சுகாதார நடவடிக்கைகள், பரிசோதனை நிலவரம் ஆகியவற்்றை அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பச்சை, சிவப்பு, ஆரஞ்ச மண்டலங்களைப் பிரி்த்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதான் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ நாங்கள் அடையாளப்படுத்தியுள்ள அதிகம் கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்களில் தீவிரக் களப்பணியும், கண்காணிப்பும் அவசியம். கரோனா நோயாளகள் எண்ணிக்கையைப் பொறுத்து, இரட்டிப்பாகும் விதத்தி்ன் அடிப்படையில் ஹாட்ஸ்பாட், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்கள் முன்பு பிரிக்கப்பட்டன

கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணி்க்கை அடிப்படையாக வைத்து மண்டலங்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த21 நாட்களாக எந்தவிதமான கரோனா நோயாளிகளும் புதிதாக உருவாகாமல் இருக்கும் மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார.

டெல்லியில் மொத்தம் 11 சிவப்பு மண்டலங்களும், உத்தரப்பிரதேசத்தில் 19 சிவப்பு மண்டலங்கள், 36 ஆரஞ்சு மண்டலங்கள், 20 பச்சை மண்டலங்கள் உள்ளன. தமிழகத்தில் 12 சிவப்பு மண்டலங்கள், 24 ஆரஞ்சு மண்டலங்கள், ஒரு பச்சை மண்டலம் உள்ளன

மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், ஆரஞ்சு மண்டலத்தில் 16 மாவட்டங்களும், 6 பச்சை மண்டலத்திலும் உள்ளன. இதில் மும்பை, புனே, தானே, நாசிக் ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில் 10 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், ஆரஞ்சு மண்டலத்தில் 5 மாவட்டங்களும், பச்சை மண்டலத்தில் 8 மாவட்டங்களும் உள்ளன. இதில் கொல்கத்தா, ஹவுரா, 24பர்கானா ஆகியவை சிவப்பு மண்டலத்திலும், ஹூக்ளி, நாடியா, முர்ஷிதாபாத் ஆரஞ்சு மண்டலத்திலும் உள்ளன.

கேரள மாநிலத்தில் 2 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன, 10 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், 2 மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்