ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைவதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
ரஷ்யாவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் காணொலி மூலம் கூறுகையில், “ எனக்கு கரோனா பாஸிட்டிவ் என்று மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை நான் அதிபர் புதினுக்கு தெரிவித்துவி்ட்டேன். என்னை தனிமைப்படுத்திக்கொண்டாலும், முக்கிய கொள்கை முடிவுகளில் அதிகாரிகளுடன் தொடர்ந்துதொடர்பில் இருப்பேன். என்னுடைய பணிகளை தற்காலிகமாக துணைப் பிரதமர் ஆன்ட்ரி பெலுசோவ் கவனிப்பார்” எனத் தெரிவித்தார்.
» ரஷ்ய பிரதமருக்கு கரோனா வைரஸ் பாஸிட்டிவ்: தனிமைப்படுத்திக் கொண்டதாக அதிபர் புதினுக்கு தகவல்
பிரதமர் மிகைல் விரைவில் கரோனாவிலிருந்து குணமடைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் பிரதமர் மோடியும் தனது வாழ்த்துகளை பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “ ரஷ்ய பிரதமர் மிஷுஸ்டின் கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைவதற்கு என வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்வதற்கு எங்களுடைய நெருங்கிய தோழமைநாடான ரஷ்யாவுடன் இந்தியா துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago