மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறியதாவது: இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,718 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோல, கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 630 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீள்பவர்கள் சதவீதம் 25.19 ஆக அதிகரித்துள்ளது.
ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டாரா என்பதை அறிய மத்திய அரசு தற்போது ஆர்டி-பிசிஆர் என்னும் சோதனையைச் செய்து வருகிறது. தற்போது வரை 292 அரசு ஆய்வகங்களிலும், 97 தனியார் ஆய்வகங்களிலும் இந்த சோதனையைச் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 49,800 பேருக்கு இந்தசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை செயலர் பி.எஸ்.ஸ்ரீவத்சவா கூறும்போது, “மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுருப்பதால் இடையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago