பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூச்சியை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
கொவிட்-19 தொற்று பரவலால் உள்நாட்டிலும், உலக அளவிலம் ஏற்பட்டுள்ள நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
முதலில் அண்டைநாடு என்ற இந்தியாவின் கொள்கைக்கு முக்கிய தூணாக விளங்கும் மியான்மரின் முக்கியத்துவம் பற்றி விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, கொவிட்-19 தொற்று காரணமாக மியான்மரில் ஏற்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்துக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்பதை தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள மியான்மர் குடிமக்களுக்கு இந்திய அரசு இயன்றவரை அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்த பிரதமர், மியான்மரில் உள்ள இந்திய மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளித்து வரும் ஒத்துழைப்புக்காக அரசின் ஆலோசகருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
» கரோனா பணியில் 92 ஆயிரம் தன்னார்வ அமைப்புகள்: மத்திய அமைச்சர் ஆலோசனை
» இந்தியாவில் லாக் டவுனின் பலன் தெரியுமா? சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்
கொவிட்-19 காரணமாக உருவாகும் தற்போதைய மற்றும் வருங்காலச் சவால்களைச் சந்திக்க சேர்ந்து பணியாற்றுவதற்கும், தொடர்பில் இருப்பதற்கும் இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago