இந்தியாவில் லாக் டவுனின் பலன் தெரியுமா? சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்

By பிடிஐ


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவில் கொண்டுவரப்பட்ட லாக் டவுனால் கரோனா இரட்டிப்பாகும் வேகம், வீதம் குறைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இறப்பு வீதம் குறைந்துள்ளது.

அதிகமான மருத்துவ வசதிகள், கல்வியறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ள வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா இறப்பு வீதம் மிகக்குறைவு. மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள், வேர்ல்டோ மீட்டர் இணையதளம் ஆகியவற்றின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டால் இது புரியவரும்.

கரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கடந்து 1,074 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கரோனா நோயாளிகளில் 500 எண்ணிக்கை முதல் 1000 எண்ணிக்கையைத் தொடுவதற்கு 5 நாட்கள் தேவைப்பட்டன. 2 ஆயிரம் எண்ணிக்கையைத் தொட 4 நாட்கள் தேவைப்பட்டன.

4 ஆயிரம் எண்ணிக்கையை எட்டுவதற்கு அடுத்து 3 நாட்களும், 8 ஆயிரம் எனும் எண்ணிக்கையை எட்ட 6 நாட்களும், அடுத்த இரட்டிப்பான 16 ஆயிரத்தை எட்ட 8 நாட்களும், 32 ஆயிரத்தை எட்டுவதற்கு 10 நாட்களும் தேவைப்பட்டன.

லாக் டவுன் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளே இருந்ததன் காரணமாக கரோனா வைரஸ் பரவுதல் வேகம் குறைந்து, இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் நாட்கள் அளவு அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.

இதே நிலைமையை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால், அமெரிக்காவில் கரோனா நோயாளிகள் 500 முதல் 1000 எண்ணிக்கையை எட்ட தொடக்கத்தில் 3 நாட்கள் தேவைப்பட்டன. ஆயிரம் முதல் 2 ஆயிர்தை எட்ட 2 நாட்கள், 2,000 முதல் 4,000 எண்ணிக்கையை எட்ட 3 நாட்கள் எடுத்துக்கொண்டன.

4 ஆயிரம் முதல் 8 ஆயிரத்தை எட்ட 2 நாட்களும், 8 ஆயிரம் முதல் 16 ஆயிரத்தை எட்ட 2 நாட்களும், 16 ஆயிரம் முதல் 32 ஆயிரத்தை எட்ட அடுத்த 2 நாட்களும் தேவைப்பட்டன. இந்தியாவோடு ஒப்பிடும்போது அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகம். இரட்டிப்பாகும் இடைவெளி நாட்கள் குறைந்துள்ளது.

இத்தாலி மற்றும் ஸ்பெயினிலும் தொடக்கத்தில் 2 நாட்கள் இடைவெளியில் இரட்டிப்பாகி பின்னர் 5 நாட்கள் வரை நோயாளிகள் இரட்டிப்பாகும் கால இடைவெளி அதிகமானது. ஆனால், பரவும் வேகம் அதிகரித்தவுடன் இரட்டிப்பாகும் இடைவெளி 5 நாட்கள் என்று இருந்தது 2 நாட்களாகச் சுருங்கியது.

பிரிட்டனில் 500 முதல் 1000 நோயாளிகள் எண்ணிக்கை வர 2 நாட்களும், 1000 முதல் 2000 வரை 4 நாட்களும் தேவைப்பட்டன. 2000 முதல் 4000 வரை 3 நாட்களும், 4 ஆயிரம் முதல் 8 ஆயிரத்தை அடைய 3 நாட்களும், 16 ஆயிரத்தை அடைய 4 நாட்களும், 32 ஆயிரத்தை அடைய 5 நாட்களும் இடைவெளியும் எடுக்கப்பட்டன.

ஜெர்மனியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 500 முதல் 1000 எட்டுவதற்கு 3 நாட்களும், 1000 முதல் 2000 வரை எட்ட 4 நாட்களும், 2000 முதல் 4000 எட்ட 2 நாட்களும், 4 ஆயிரம் முதல் 8000 அடைய 3 நாட்களும் தேவைப்பட்டன. 8 ஆயிரம் முதல் 16 ஆயிரத்தை அடைய 3 நாட்களும், 16 ஆயிரம் முதல் 32 ஆயிரத்தை அடைய 4 நாட்களும் தேவைப்பட்டன.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா நோயாளிகள் இருமடங்காக அதிகரிக்கும் காலம் 2 நாட்கள் முதல் 3 நாட்கள் வரை இருக்கிறது. ஆனால் இந்தியாவி்ல் லாக் டவுன் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டதால், கரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்து, நாட்கள் இடைவெளி அதிகரித்தது.

கரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவில் 4 ஆயிரத்து 67 கரோனா நோயாளிகள் என்ற நிலையில் வந்தபோதுதான் உயிரிழப்பு 100-ஐத் தொட்டது. இது பிரான்ஸில் 5,423 நோயாளிகள் என்று வந்தபோது 100-ஐத் தொட்டது. ஸ்பெயினில் 4,231, பிரிட்டனில் 2,630, பிரேசிலில் 3,904 ஆக கரோனா நோயாளிகள் வந்தபோதுதான் உயிரிழப்பு 100 பேரைத் தொட்டது.

இந்தியாவில் 500 பேர் கரோனாவில் உயிரிழந்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,712 ஆக இருந்தது. இது பிரானிஸில் 14,459 ஆகவும், இத்தாலியில் 10,419 ஆகவும், ஸ்பெயினில் 13,716 ஆகவும் பிரிட்டனில் 12,056ஆகவும் இருந்தது.

இந்தியாவில் 31,332 என்று எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் வந்தபோதுதான் உயிரிழப்பு ஆயிரத்தை அடைந்தது. ஆனால், பிரான்ஸில் 22,304 என்ற எண்ணிக்கையின் போதே ஆயிரம் உயிரிழப்புகள் வந்துவிட்டன. ஸ்பெயினில் 21,751, பிரிட்டனில் 17,089, பிரேசிலில் 19,789 நோயாளிகள் வந்தபோதே ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தனர்.

ஆக ஐரோப்பிய நாடுகளுடன் கரோனா இறப்பு வீதத்தை ஒப்பிட்டால் இந்தியாவின் இறப்பு வீதம் மிகக் குறைவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்