‘‘நடந்து வர வேண்டாம்; ஏற்பாடு செய்கிறோம்’’ புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே ஊர் திரும்ப வேண்டாம், விரைவில் அவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே ஊர் திரும்ப வேண்டாம், விரைவில் அவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். இதற்காக மாநில அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கிய மாணவர்களை பேருந்து மூலம் அழைத்து வந்தது போலவே தொழிலாளர்களையும் பல்வேறு மாநிலங்களில் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அதிகமான தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் இருந்து ரயில் மூலம் மீட்டு வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா எனவும் ஆராயப்பட்டு வருவதாக உ.பி. அரசு தெரவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்