கல்லூரிகளுக்கு அடுத்த கல்வியாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் எனவும், முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கலாம் என பல்லைக்கழக மானியக்குழு வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்டன. மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு மே 3-ம் தேதிவரை தொடர் உள்ளது. மே 3 -ம் தேதிக்குப் பிறகும் என்ன நிலை என்பது தெரியாது. தற்போதுவரை ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை.
ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரித் தேர்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் இந்தியா முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து பல்லைக்கழக மானியக்குழு வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
* கல்லூரிகளுக்கு அடுத்த கல்வியாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும்.
* முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கும் எனவும் பல்லைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
* சில மாநிலங்களில் 12-ம் வகுப்புக்கு பதிலாக நடத்தப்படும் பியூசி வகுப்புகளுக்கான
* இண்டர்மீடியட் செமஸ்டர் நடத்த வேண்டாம் எனவும், அதற்கான மதிப் பெண் அகமதிப்பீடு அடிப்படையில் நடத்த வேண்டும்.
* கரோனா சூழல் சரியானால் ஜூலை மாதம் டெர்மினல் செமஸ்டர் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் நிலைமை சீரடையாவிட்டால் பின்னர் நடத்திக் கொள்ளலாம்.
* இதுமட்டுமின்றி பல்கலைக்கழகங்கள் வேண்டுமென்றால் ஆன்லைனில் தேர்வு நடத்திக் கொள்ளலாம்.
* தேர்வுக்கான பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும், தேர்வும் 3 மணிநேரத்திற்கு பதிலாக 2 மணிநேரமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு யூஜிசி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago