சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்  உத்தரவு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வினால் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை எனவும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் நலனை முன்னிட்டும் மருத்துவக் கல்வியை சீராக்கும் நோக்கிலேயே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.

நாட்டின் நலனை முன்னிட்டு கொண்டு வரப்படும் தேர்வுக்கு பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்க முடியாது. அதுபோலவே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தேர்வு நடத்தும் பரிந்துரையையும் ஏற்க முடியாது.

அரசு உதவி பெறாத மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் நீட் சட்டம் இல்லை. இதனால் இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்