கரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு முதலில் பாசிட்டிவ் என்றும் பிறகு இல்லை இல்லை நெகட்டிவ் என்றும் பிறகு மீண்டும் பாசிட்டிவ் என்றும் மாறி மாறி சொல்லி கடைசியில் நோயாளி மரணமடைந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மரணமடைந்த இவரது குடும்பத்தில் உள்ள இவரது மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் மே 3ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், வயது 68. இவர் ஏப்ரல் 22ம் தேதி பங்கூர் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஓம்பிரகாஷுக்கு கரோனா இருப்பதாகவும் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் அடுத்த நாளே ஓம்பிரகாஷுக்கு கரோனா இல்லை, டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்து விட்டது என்று அவரை விடுவித்து ரிப்போர்ட்டில் கரோனா நெகட்டிவ் என்று தெளிவாக எழுதியும் விட்டனர்.
» ‘‘உணவில்லை; சொந்த ஊர்களுக்கு அனுப்பி வையுங்கள்’’ - ஹைதராபாத்தில் 2400 தொழிலாளர்கள் போராட்டம்
» பறிக்கும் கூலி கூட கொடுக்க முடியாத நிலை: மலர் தோட்டங்களை அழிக்கும் விவசாயிகள்
ஆனால் இதோடு விடவில்லை, மீண்டும் சுகாதாரத்துறையிடமிருந்து வந்த அழைப்பில் ராஜ்குப்தாவுக்கு கரோனா பாசிட்டிவ் என்று மீண்டும் தெரிவித்தனர், இந்த குழப்பங்களுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
கடைசியில் ஓம்பிரகாஷ் மரணமடைந்தார். தன்னுடைய தந்தையுடன் நடந்த கடைசி உரையாடலை மகன் ராஜ்குப்தா செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago