பறிக்கும் கூலி கூட கொடுக்க  முடியாத நிலை: மலர் தோட்டங்களை அழிக்கும் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் மலர் சாகுபடி செய்தநிலையில் அதனை பறிப்பதற்கான கூலி வழங்க கூட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் யாருமில்லை. வயலுக்கு செல்வோரும் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளால் வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

அறுவை செய்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்றவற்றை விற்பனை செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக மலர்களின் தேவை கடுமையாக குறைந்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாதாதலும், கோயில்கள் மூடப்பட்டுள்ளதாலும் மலர்கள் விற்பனை அறவே நடைபெறவில்லை. இதனால் பெருமளவு மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலர் சாகுபடி செய்தநிலையில் அதனை பறிப்பதற்கான கூலி வழங்க கூட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் அவர்கள் மலர்கள் பயிர் செய்த நிலங்களில் அவை நன்றாக பூத்து சாகுபடி தரும் தருவாயில் வேறு வழியின்றி அவற்றை அழிக்கத் தொடங்கியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அதிகஅளவு கேந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. ஆனால் இவற்றை விற்க முடியாத சூழல் நிலவுவதால் அவற்றை விவசாயிகள் டிராக்டர்களைால் அழித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி மஹிபால் சிங் கூறுகையில் ‘‘வேறு வழியில்லாமல் மலர்களை அழிக்கிறோம். அந்த இடத்தில் வேறு பயிராவது செய்யலாம் என திட்டமிட்டுள்ளோம்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்