இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், 47 மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக பாதிப்பில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்னிக்கை 31,500 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 1009 ஆகவும் அதிகரித்துள்ளது. பரேலியில் முதல் கரோனா மரணம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் எந்தவொரு தொற்றுநோய் பாதிப்பும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் 129 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
இந்தியா முழுவதும் கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் எந்தவொரு புதிய பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக யாருக்கும் பாதிப்பு வரவில்லை.
கடந்த 21 நாட்களை பொறுத்தவரை 39 மாவட்டங்களில் ஒருவர் கூட பாதிக்கவில்லை. 17 மாவட்டங்களில் ஒரு மாதமாகவே எந்தவொருவருக்கு கொரோனா தொற்று இல்லை. சோதனை திறன்களை ஐ.சி.எம்.ஆர்., கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago