70 வயது கரோனா வைரஸ் தொற்று முதியவர் தனிமை மையத்திலிருந்து வெளியேற்றம்: 17 கிமீ நடந்தே வீட்டுக்குச் சென்றார்- பூட்டியிருந்த வீடு

By ஏஎன்ஐ

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் 70 வயது கரோனா வைரஸ் நோயாளி ஒருவர் பேல்வாடியில் உள்ள தனிமை மையத்திலிருந்து வெளியேறி 17 கிமீ நடந்தே சென்று தன் வீட்டுக்கு வந்துள்ளார்.

தனிமை மையத்தில் நோயாளிகளுக்கு உணவு அளிப்பதில்லை என்றும் அங்கு கழிவறைகள் சுத்தமாக இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை அண்டை வீட்டார் சிலர் முதியவர் வீட்டின் முன் உதவியின்றி அமர்ந்திருப்பதை பார்த்தனர், காரணம் வீட்டில் உள்ளோரையும் கோவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தியதால் வீடு பூட்டிக் கிடந்தது.

இந்த முதியவருக்கு ஏப்ரல் 25ம் தேதி கரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து வீட்டுக்கு வந்த இவர் பற்றி அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவித்தனர். உடனே ஆம்புலன்ஸ் வந்து அவரை மீண்டும் தனிமைப்பிரிவுக்கு இட்டுச் சென்றனர்.

யேரவாடா முனிசிபல் அதிகாரியான சித்தார்த் தேந்தே கூறும்போது, இவர் தப்பி வந்தது பேலவாடி மைய அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ஏப்ரல் 24ம் தேதி இவர் காரடி தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்டார், 25ம் தேதி இவருக்கு கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தது இதனையடுத்து பேலவாடி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முதியவரின் மகனுக்கும் கரோனா இருந்ததையடுத்து அவர் தன் தந்தையை தனிமை பிரிவுக்கு மீண்டும் செல்லுமாறு வலியுறுத்தினார்.

நல்ல வேளையாக இவர் வெளியேறி வேறு ஒருவருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று அதிகாரிகள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்