அதிகரித்த கரோனா மரணம்: இந்தியாவில் பலி எண்ணிக்கை 1007; பாதிப்பு 31,332 ஆனது- சுகாதார அமைச்சகம் தகவல்

By பிடிஐ

கரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இருந்தாலும் பல மாவட்டங்களில் புதிய தொற்றுக்கள் உருவாகாதது ஆறுதல் செய்தியே. இருப்பினும் கரோனா பலி எண்ணிக்கை 1007 ஆக அதிகரித்துள்ளது, பாதிப்பு எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பினால் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 22,969, குணமடைந்தோர் எண்ணிக்கை 7,695. மொத்த கரோனா நோயாளிகளில் அயல்நாட்டினர் எண்ணிக்கை 111 ஆக உள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை முதல் 70 மரணங்கள் நிகழ்ந்துள்ளன, இதில் மகாராஷ்ட்ராவில் 31 பேரும், குஜராத்தில் 19 பேரும், ம.பி.யில் 7 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், உ.பி.யில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் 2 பேரும், ஜம்மு, பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவரும் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

1007 மரணங்களில் மகாராஷ்டிரா 400 மரணங்களுடன் முதலிடத்தில் உள்ளது, தொடர்ந்து குஜராத் மாநிலம் 181 மரணங்களுடனும், மத்தியப் பிரதேசம் 120 மரணங்களுடனும் டெல்லி 54 மரணங்களுடனும், ராஜஸ்தானில் 51, உ.பி.யில் 34 ஆந்திராவில் 31 என்றும் மரண விகிதத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 26 ஆகவும், தமிழ்நாட்டில் 25 ஆகவும், மேற்கு வங்கத்தில் 22 ஆகவும் கர்நாடகாவில் 20 ஆகவும் பலி எண்ணிக்கை நிலவரங்கள் உள்ளன.

பஞ்சாபில் கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 19 ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 8 பேர் உயிரைப் பறித்துள்ளது. கேரளாவில் 4 பேர் பலியாகியுள்ளனர், ஜார்கண்ட், ஹரியாணாவில் தலா 3 பேர் பலியாகியுள்ளனர்.

பிஹாரில் 2 பேரும், மேகாலயா, ஹிமாச்சலம், ஒடிசா, அஸாம் மாநிலங்களில் முறையே ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

இன்று காலை புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் படி நாட்டில் உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மகாராஷ்ட்ராவில் 9,318 என்று முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் 3744, டெல்லீய்ல் 3314, ம.பி.யில் 2,387, ராஜஸ்தானில் 2,364, தமிழகத்தில் 2,058, உ.பி.யில் 2,053 நோயாளிகள் உள்ளனர்.

ஆந்திராவில் 1,259 ஆகவும் தெலங்கானாவில் 1,004 ஆகவும் கரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு எண்னிக்கை 725 ஆகவும் ஜம்மு காஷ்மீரில் 565 ஆகவும், கர்நாடகாவில் 523 ஆகவும் கேரளாவில் 485 ஆகவும், பிஹாரில் 366 ஆகவும், பஞ்சாபில் 322 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஹரியாணாவில் 310 கரோனா நோயாளிகள் உள்ளனர். ஒடிசாவில் 118 நோயாளிகளும், ஜார்கண்டில் 103, உத்தர்கண்டில் 54 பேர்களுக்கு கரோனா தொற்று இருந்து வருகிறது.

சண்டிகர் மாநிலத்தில் 56 கேஸ்களும், இமாசலத்தில் 40 கேஸ்களும், அசாம், சத்தீஸ்கரில் முறையே 38 கேஸ்களும் ரிப்பொர்ட் ஆகியுள்ளன.

அந்தமான் நிகோபாரில் 33 கோவிட்-19 நோயாளிகளும் லடாக்கில் 22 தொற்றுகளும் உறுதியாகியுள்ளன. மேகாலயாவில் 12, புதுச்சேரியில் 8, கோவாவில் 7 பேர் என்று கரோனா பாதிப்பு உள்ளது. மணிப்பூர் மற்றும் திரிபுராவில் முறையே 2 கரோனா பாசிட்டிவ்கள், மிஜோரம், அருணாச்சலில் தலா 1 கேஸ் உள்ளன.

“எங்களின் இந்த எண்ணிக்கை ஐசிஎம்ஆர் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகின்றன”என்று சுகாதார அமைச்சகம் தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்