ம.பி. இந்தூரில் கரோனா பாதிப்பு கடும் அதிகரிப்பு- ஒரே நாளில் 94 பேருக்கு தொற்று- லாக் டவுன் மே-3ம் தேதியையும் தாண்டி நீடிக்க வாய்ப்பு

By பிடிஐ

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கரோனா வைரஸ் பரிசோதனையில் ஒரே நாளில் 94 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,471 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய் இரவு நிலவரப்படி கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இதில் உஜ்ஜயினியைச் சேர்ந்த 3பேர், இந்தூரைச் சேர்ந்த 2 பேர், போபால், ரைசன், திவாஸ் மற்றும் அசோக்நகரிலிருந்து தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

மொத்தம் மாநில பலி 122-ல் இந்தூரில் மட்டும் 65 பேர் பலியாகியுள்ளனர். பச்சை மண்டலமாக மாறிய ஜபல்பூரில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க சிகப்பு மண்டலமாக மாறியுள்ளது.

இதனையடுத்து மத்தியப் பிரதேசத்தில் லாக்-டவுன் மே 3ம் தேதியையும் தாண்டி நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

மாநிலத்தின் புர்ஹான்பூர், அசோக்நகர், ஷாடோல், ரேவா மாவட்டங்கள் முதல் கரோனா வைரஸ் தொற்றைப் பெற்றுள்ளது. இதனையடுத்து கரோனா பாதிப்பு மாவட்டங்கள் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத் தலை நகர் போபாலில் 30 புதிய கரோனா தொற்றுக்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது.

1466 கரோனா தொற்றுகளுடன் மாநிலத்தின் மோசமான பாதிப்புப் பகுதியாகியுள்ளது இந்தூர். போபாலில் 458 கரோனா கேஸ்களும் உஜ்ஜயினியில் 123 கேஸ்களும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்