ஏழுமலையான் கோயிலில் ஜூன் 30 வரை தரிசனம் ரத்தா?- திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

By என்.மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 30 வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மார்ச் 20-ம் தேதி நண்பகல் முதலேஏழுமலையான் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், கோயிலில் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை நடைபெற்று வருகிறது. திருப்பதி கோயில் வரலாற்றில் இதுவரை இத்தனை நாட்கள் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டதில்லை. ஆதலால், ஏழுமலையானை மீண்டும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் திருப்பதி கோயிலில் ஜூன் 30-ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுவாமி தரிசனம்செய்ய பக்தர்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து அறங்காவலர் குழுவின் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்