வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 1 கோடி இந்தியர்களை மீட்க பிரமாண்ட நடவடிக்கை: விமானங்கள், கப்பல்கள் விரைகின்றன

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகரித்து வரும் வளையில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கரோனா வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளில் கரோனா தொற்று பாதிப்புள்ள காரணத்தால் அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை குறித்து அவ்வப்போது இந்தியா கேட்டறிந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி, தொலைபேசியில் குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவை, அழைத்துப் பேசினார்.

உரையாடலின் போது, இரு தலைவர்களும் கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி விவாதித்தனர்.

குவைத்தில், ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளுக்குள் நடத்தப்பட்ட சோதனைகளில் 28 வெளிநாட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் 24 பேர் இந்தியர்கள். 2 பேர் வங்க தேசத்தவர்கள். நேபாளத்தைச் சேர்ந்தவர் ஒருவர். வளைகுடா நாடுகளில் 2 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே இரு இந்தியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்தம் 26 இந்திய வெளிநாட்டவர்கள் குவைத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குவைத்தில் மொத்தம் 317 பேருக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா மட்டுமின்றி பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை உடனே திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் வளையில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

வளைகுடா நாடுகளில் சுமார ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் கணிமான பகுதியினர் துறைமுக நகரங்களில் வசிக்கின்றனர். எனவே இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களை அனுப்பி தலா 1500 பேர் வீதம் என மொத்தம் 4500 பேர் வீதம் அழைத்து வர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக கடற்படை விரிவான அறிக்கையை அளித்துள்ளது. இதுபோலவே துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

அவ்வாறு மீட்கப்படும் போது முதலில் வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்