வடகிழக்கு பகுதியின் 5 மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்றுஅவர் கூறியதாவது:
வடகிழக்கில் சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சல பிரசதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் கரோனா வைரஸ்பாதிப்பு இல்லை. அசாம், மேகாலயா, மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று காணப்படுகிறது. அதுவும் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதனால்தான் அப்பகுதியில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.
ஊரடங்கின்போதும் ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த சரக்கு விமானங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. வடகிழக்கில் அமைந்துள்ள 8 மாநிலங்களின் அரசுகளும் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிக்கு ஊரடங்குக்கு முன்பாகவே ரூ.25 கோடி சிறப்பு நிதி வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரைப்படி வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago