கை துண்டிக்கப்பட்ட காவல் அதிகாரிக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸார் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபின் பாட்டியாலா நகரில் கடந்த 12-ம் தேதி, ஊரடங்கு உத்தரவை மீறி காரில் வந்த சிலருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காரில் வந்த கும்பல் நடத்திய தாக்குதலில் ஹர்ஜித் சிங் (50) என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டரின் இடது கை துண்டிக்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இவரது கைது இணைக்கப்பட்டது. மேலும் இவருக்கு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஹர்ஜித் சிங் மற்றும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முதல் வரிசையில் இருக்கும் பிறருக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், பஞ்சாப் மாநில போலீஸார் நேற்று “நானும் ஹர்ஜித் சிங் தான்” என்ற பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநில காவல் துறை இயக்குநர் திங்கர் குப்தா கூறும்போது, “ஹர்ஜித் சிங் போல, கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், போலீஸார் உள்ளிட்ட எவர் மீதும் தாக்குல் நடத்தப்படுமானால் அது இந்தியர்களை ஒன்றுதிரள வைக்கும் என்று அனைவருக்கும் உணர்த்துவதற்காக இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்