மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
* ஊரடங்கு உத்தரவு மூலம் கரோனா பரவுதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் அதேசமயம் நாட்டின் பொருளாதார பாதிப்புகளை எதி்ர்த்து போராடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
* ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும் முககவசம் கட்டாயம் என்பதுடன், போதிய சமூக இடை வெளியை கடைபிடிப்பது அவசியம் எனவும் பிரதமர் மோடி கூறினார.
* கரோனா பாதிப்பு குறைவாக உள்ள அஆரஞ்சு மற்றும் பச்சை நிறப்பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
» 150 சதவீத லாபத்தில் கரோனா ரேபிட் கிட் விற்பனை: பிரதமர் மோடி தலையிட ராகுல் காந்தி வலியுறுத்தல்
» ‘‘கரோனா நோயாளிகள் குற்றவாளிகள் அல்ல’’- பிரதமர் மோடி ஆதங்கம்
* அதேசமயம் கரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு பகுதிகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொது போக்குவரத்து உடனடியாக தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம் தனியார் வாகனங்கள் குறிப்பாக கார் போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் தொடங்க வாய்ப்புள்ளது.
* பள்ளிகள், கல்லூரிகள் உடனடியாக திறக்கப்பட வாய்ப்பில்லை.
* அதுபோலவே வழிபாட்டு தலங்கள், பொது நிகழ்ச்சிகள், சமூக கூட்டங்கள், கேளிக்கை விடுதிகள், சினிமா போன்றவைற்றுக்கு உடனிடயாக அனுமதி கிடையாது.
* இன்றையக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடிய 9 முதல்வர்களில் 5 பேர் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் மற்றவர்கள் ஊரங்கு தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.
* மேகலாயா மற்றும் ஒடிசா மாநிலங்கள் கட்டாயம் ஊரடங்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago