கரோனா; குறைந்த செலவில் செயற்கை சுவாசக் கருவி: மும்பை ஐஐடி மாணவர் சாதனை

By செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளுக்க பயன்படும் வகையில் மும்பை ஐஐடி மாணவர் தலைமையிலான குழு ருஹ்தார் என்ற பெயரில் செயற்கை சுவாசக் கருவியைத் தயாரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் சம நிலையை அடையத் துவங்கியுள்ளது என்றும், நோய் அதிக அளவில் பாதிப்பது, கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அரசு கூறியுள்ளது

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு, இந்த நோயின் தாக்கம் மிதமாகவே இருக்கும். 15 சதவிகித பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும். மீதமுள்ள 5 சதவிகிதம் பேருக்கு நோய் பாதிப்பு கடுமையாக இருக்கும். அவர்களுக்குத்தான் செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மிக முக்கிய மருத்துவ தேவையாக, செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. இந்நோயால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு விடுவதற்கு உதவியாக, இக்கருவிகள் இருக்கும்.

செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படுகின்ற நிலையை சமாளிப்பதற்காக, தாமாகவே முன் வந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல குழுவினர்களுள் இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ஐஐடி மும்பை; தேசிய தொழில்நுட்பக்கழகம் (NIT), ஸ்ரீநகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இஸ்லாமிக் பல்கலைக்கழகம், அவந்திபுரா, புல்வாமா, ஜம்மு காஷ்மீர் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழுவும் ஒன்றாகும். இந்தக் குழு, குறைந்த செலவிலான, உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய செயற்கை சுவாசக் கருவியை தயாரித்துள்ளது.

“இந்தக் கருவியின் மாதிரியை அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு, இந்தக் குழு எடுத்துச் செல்லும். இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, இவை மொத்தமாக உற்பத்தி செய்யப்படும். சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய வகையில், இதை வடிவமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்