மக்கள் பாதுகாப்புக்காகப்  போராடுபவர்களையும் விட்டு வைக்காத கரோனா:  சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 15 பேருக்கு பாசிட்டிவ்

By பிடிஐ

சிஆர்பிஎஃப் 31வது படைப்பிரிவைச் சேர்ந்த 15 வீரர்களுக்கு கரோனா தொற்று சோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மந்தாவலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் இந்த சிஆர்பிஎஃப் யூனிட்டில் கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 12 வீரர்களின் சாம்பிள்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த யூனிட்டுக்கு கடந்த வாரம் வருகை தந்த ஹெட் கான்ஸ்டபிளுக்கு சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா பாசிட்டிவ் என்று வந்தது. இதனையடுத்து இந்த படையினரின் சிலருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் குப்வாராவில் 162வது படைப்பிரிவில் நர்சிங் உதவியாளராக இருந்த இந்த ஹெட் கான்ஸ்டபிள் நொய்டாவில் விடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் 31வது பட்டாலியனுக்கு ரிப்போர்ட் செய்யுமாறு கோரப்பட்டதில் ஜவான் ஒருவருக்கு ஏப்ரல் 21ம் தேதி கோவிட் பாசிட்டிவ் உறுதியானது.

இந்த மாதத் தொடக்கத்தில் துணை ராணுவப்படையினரின் மருத்துவர் ஒருவருகு கரோனா தொற்றியது, ஹெட் கான்ஸ்டபிளுக்கு அகமதாபாத்தில் தொற்றியது.

3.25 லட்சம் வீரர்களுடன் சிஆர்பிஎஃப் நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படை அல்லது மத்திய ஆயுதப்படையாகும், உள்நாட்டுப் பாதுகாப்பில் முன்னிலை வகிப்பவர்களாவார்கள் இவர்கள்.

நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் மற்றும் சட்டம் ஒழுங்கு காப்பு நடவடிக்கைகளில் இவர்களது பங்கு அளப்பரியதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்