உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கரோனா இருப்பதாக தவறாக கருதப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பெண் வெள்ளிக்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதாவது இவருடைய பெயருடைய வேறொரு பெண்ணிக்கு இருந்த கரோனா பாசிட்டிவ் முடிவை இந்தப் பெண் என்று தவறாக நினைத்து அனுமதித்தனர், இதோடி இவர் குடும்பத்தினர் தனிமைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டதோடு இவர் வசிக்கும் தெருவே தனிமைப்படுத்தப்பட்டது.
ஷாமிலி கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி பால்குமார் கூறும்போது, மீரட் மெடிக்கல் காலேஜில் தவறு நிகழ்ந்தது. இவருக்குக் கரோனா இருப்பதாக ரிப்போர்ட் வந்தது, ஆனால் இதே பெயருடைய இன்னொரு பெண்ணுடைய ரிப்போர்ட் ஆகும் அது என்றார்.
இந்தப் பெண் மற்றும் இவரது குடும்பத்தினர் மூவரின் சாம்பிள்கள் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப் பட்டது. முதல் அறிக்கையின்படி, சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை அளவுகோலாக பெண்ணை மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் அனுமதித்தனர். குடும்பத்தினர் மூவரும் தனிமைப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
இந்தத் தவறான கணிப்பினால் இவர் வசித்த தெருவே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தெருவாசிகளின் கோபம் முழுதும் இந்தக் குடும்பத்தினர் மீது விழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை தவறு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago