சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் பற்றி பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் தெற்கு கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவிலேயே ரேபிட் கிட் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட்டின் மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் 5.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே துல்லியத்தன்மை இருக்கிறது என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டது. கரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை செய்வதற்கான வரைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதன்படி, கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே, பெரும்பாலும் இந்த ஆன்டிபாடி ராபிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் பற்றி பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் தெற்கு கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவிலேயே ரேபிட் கிட் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஹரியாணாா மாநிலம் குர்கிராம் நகரில் செயல்பட்டு வரும் எஸ்டி பயோசென்சார் நிறுவனம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago