கரோனா பாதிப்பு; ரம்ஜான் மாதத்தில் மக்கள் நலனுக்காக தொழுகை: நக்வி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரம்ஜான் மாதத்தில் மக்கள் நலனுக்காக தொழுகை நடத்துவோம் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உண்டு. இதுமட்டுமின்றி மசூதிகளில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையும் நடத்துவார்கள். தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும்.

இதுபோன்ற வழக்கங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
ரம்ஜான் நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆசிர்வாதத்தை வேண்டுவதுடன் உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்வோம். வீடுகளில் இருந்து மட்டும் தொழுகை நடத்த வேண்டும் என இஸ்லாமிய சமூக தலைவர்கள், மத அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி இஸ்லாமிய மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து சமூக இடைவளியை அவசியம் பின்றி அதேசமயம் தங்கள் தொழுகையை தொடர வேண்டும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்