ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதர துறை அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு சென்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். ஒருவேளை அனுமதி பெற்று ஆந்திர எல்லைக்குள் வந்தால் அம்மாநில அரசு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தக்கூடும்.
மேலும் ஆந்திரா வந்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் சென்றாலும் தெலங்கானா அரசால் 14 நாட்கள் தனிமைப்படுத்தக்கூடும். இதனால் ஹைதராபாத் சென்ற சந்திரபாபு நாயுடு, அங்குள்ள வீட்டில் இருந்தபடியே ஆந்திராவில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் பேசி வருகிறார். ஜெகன் மோகன் அரசு செய்யும் தவறுகளை அங்கிருந்தபடியே சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago