தப்லீக் ஜமாத்தை தடை செய்ய வேண்டும்: உ.பி. சிறுபான்மையினர் நல ஆணையம் தீர்மானம்

By ஆர்.ஷபிமுன்னா

தப்லீக் ஜமாத்தை தடை செய்ய வேண்டும் என உத்தரபிரதேச மாநில சிறுபான்மையினர் நல ஆணைய நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பில் மார்ச் 1 முதல் 22 வரை மாநாடுகள் நடந்தது. இதற்கு வந்திருந்த வெளிநாட்டவர் சிலரால் கரோனா வைரஸ் நாடு முழுவதிலும் கூடுதலாகப் பரவியது. கடந்த ஏப். 4-ம் தேதி வெளியான மத்திய அரசின் புள்ளிவிவரத்தில், 30 சதவீத பாதிப்புக்கு தப்லீக் ஜமாத் காரணமாக அமைந்த தாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தப்லீக் ஜமாத்தை தடை செய்ய வேண்டும் என உத்தரபிரதேச மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்த கடிதம், மாநில தலைமைச் செயலாளர் ஆர்.கே.திவாரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அக்கடிதத்தில் கையொப்பம் இட்ட சர்தார் பர்மிந்தர் சிங் கூறும்போது, “உ.பி.யின் கரோனா வைரஸ் நோயாளிகள் 1,400 பேரில் 900 பேர் தப்லீக் ஜமாத்தினராக உள்ள னர். இவர்களால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது தவறான கருத்து உருவாகும் சூழல் தோன்றுகிறது” என்றார்.

உ.பி.யில் அரசின் அறிவிப்புக்கு பின்னரும் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு முன்வராத ஜமாத்தினர் அதிகரித்து வருகின்றனர். உ.பி. அரசின் புள்ளிவிவரப்படி, பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்திருந்த 2,613 பேர் இது வரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 325 பேர் வெளிநாட்டவர் ஆவர். தப்லீக் ஜமாத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஒரு கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த ஆணையம் ஏற்கெனவே அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்