புனிதமான ரம்ஜான் மாதத்தில் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லுவோம், ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உண்டு. இதுமட்டுமின்றி மசூதிகளில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையும் நடத்துவார்கள்.
தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் இதுபோன்ற வழக்கங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ரம்ஜான் வாழ்த்துகள்! ஒவ்வொருவரின் பாதுகாப்புடனும், வளமுடனும் இருக்காக நான் பிராத்திக்கிறேன். இந்த புனிதமான மாதம் நமக்கு கருணை, மனிதநேயம், இரக்கத்தை கொண்டு வரட்டும். கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago