இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 23,452 ஆக அதிகரிப்பு; பலி 724 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர், 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கரோனா வைரஸால் ஒட்டுமொத்தமாக பாதி்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,452 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 723 ஆகவும் அதிகரித்துள்ளது. 4,813 பேர் கரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்