கரோனா இல்லாத இன்னொரு மாநிலம்: டெஸ்ட்டில் 2வது நோயாளிக்கும் ‘நெகெட்டிவ்’

By ஏஎன்ஐ

கரோனா பாதிப்பு இந்தியாவில் ஆங்காங்கே அதிகரித்து வரும் நிலையில் திரிபுரா மாநிலம் கரோனா இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது என்று அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் தெரிவித்துள்ளார்.

அங்கு கரோனா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நபருக்கு டெஸ்ட்டில் நெகெட்டிவ் என்று வந்ததையடுத்து கரோனா இல்லாத மாநிலமாகியுள்ளது திரிபுரா.

இது தொடர்பாக மாநில முதல்வர் தேவ் கூறும்போது, “மாநிலத்தின் இரண்டாவது சந்தேக கரோனா நோயாளி டெஸ்ட்டில் நெகெட்டிவ் என்று வந்ததையடுத்து கரோனா இல்லாத மாநிலமானது திரிபுரா. ஆனாலும் அனைவரும் சமூகத் தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கவும். வீடடங்கி வாசலடங்கி பாதுகாப்பாக இருக்கவும்.

நான் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சமூக தூரத்தைக் கடைப்பிடித்து முறையான வழிகாட்டுதலில் இந்த நிலையையே பராமரிப்போம். மாதா திரிபுரசுந்தரி நமக்கு அருள் புரியட்டும்.

ஏப்ரல் 15ம் தேதி முதல் கரோனா நோயாளி ஜிபி மருத்துவமனையிலிருந்து சோதனையில் கரோனா இல்லை என்று தெரிந்தபிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்