கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான நடமாடும் ஆய்வகத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரு கிறது. இந்நிலையில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க உத வும் செயற்கை சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு கவச உடை கள், கிருமி நாசினிகள், வைரஸ் நோயாளிகளிடமிருந்து மாதிரி களைப் பெறுவதற்கான கருவி களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏற் கெனவே தயாரித்து வழங்கி யுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற் கான அனைத்து வசதிகளும் கொண்ட நடமாடும் ஆய்வகத்தை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆய்வகத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வகத்துக்கு நடமா டும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் (எம்விஆர்டிஎல்) என்று பெயரி டப்பட்டுள்ளது. ஹைதராபாதி லுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் நிறுவனங்களின் உதவி யுடன் இந்த ஆய்வகத்தை டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது.
15 நாட்களில் இந்த ஆய்வ கத்தை உருவாக்கியுள்ள டிஆர் டிஓ அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார் என பாதுகாப்புத் துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. சாதாரண மாக இதுபோன்ற ஆய்வகத்தை உருவாக்க 6 மாத காலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வகம் மூலம் ஒரு நாளில் 1,000-த்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதனை செய்ய லாம். உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ), இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம் ஆர்) விதிகள், தர நிர்ணயத் தின்படி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத் தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சரியான நேரத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளால் மற்ற நாடு களைக் காட்டிலும் கரோனா வைரஸ் பரவுவது இந்தியாவில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவு வதைக் கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புத் துறையும் ஈடுபட் டுள்ளது பாராட்டத்தக்கது. தனிமை வார்டுகள் உள்ள மையங்கள் அமைத்தல், சுகாதார நலப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது” என்றார். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago