மத்திய அரசு ஊழியர்கள், ஓய் வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அக விலைப்படி உயர்த்தப்படுகிறது. இதன்படி, இப்போது 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1 முதல் 4 சதவீதம் உயர்த்தி 21 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கி இருந்தது.
இந்நிலையில், மத்திய நிதி யமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரண மாக, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண் டிய அகவிலைப்படி (டிஏ) உயர்வுத் தொகையை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல, வரும் ஜூலை 1, மற்றும் 2021 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது. அதேநேரம், ஏற்கெனவே உள்ள அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும். 2021-ம் ஆண்டு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து அரசு பின்னர் முடிவு எடுக்கும்.
2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலத்துக்கான அகவிலைப்படி உயர்வு தொகை வரும் காலத்தில் நிலுவைத் தொகையாக வழங்கப்பட மாட் டாது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு 18 மாதங்களுக்கு வழங்கப்படாது என்ற மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் அரசுக்கு ரூ.37,530 கோடி மிச்சமாகும். இதுபோல மாநில அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தால் அனைத்து மாநிலங் களுக்கும் ரூ.82,566 கோடி மிச்சமாகும். இந்த தொகை நிதி நெருக்கடியை சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊர டங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசின் வருவாய் குறைந் திருப்பதுடன், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங் கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக் களுக்கான நலத்திட்டங்கள் காரண மாக அரசின் செலவு அதிகரித் துள்ளது. எனவே, அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago