கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில் பாதிப்பு குறைந்த கிராமங்களில் 100 நாள் வேலைவாய்ப்பத் திட்டம் செயல்படுத்தப்படும் போது மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். அதற்கு ஆதாரங்களையும் மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு கோரியுள்ளது.
அதாவது 100 நாட்கள் வேலைத்திட்டம் நடக்கும் போது புகைப்படங்களை எடுத்து சமூக விலகலுடன்தான் மக்கள் பணியாற்றுகிறார்கள், முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக புகைப்படம் எடுத்து மத்திய கிராம மேம்பாட்டு துறை இணையதளத்தில் மாநில அரசுகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பிலும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முதல் கட்டமாக மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை முதல்கட்ட லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தொழில்கள், வேளாண் பணிகள், வர்த்தகம் அனைத்தும் முடங்கின. இதையடுத்து, 2-ம் கட்ட லாக்டவுன் ஏப்ரல் 15 முதல் மே 3-ம் தேதிவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதில் 20-ம் ேததிக்குப்பின் கட்டுப்பாடுகளை தளர்த்தி சில தொழில்கள் செய்யவும், வேளாண் பணிகள் செய்யவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புதி்ட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்தது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். ஆனால், இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் ராேஜஷ் பூஷான், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பங்கேற்கும் மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் சமூக விலகலைக் கடைபிடித்துதான் வேலை செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அதாவது புகைப்படங்களை எடுத்து மத்திய ஊரக மேம்பாட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் வேலைபார்க்கும் இடங்களில் கைகழுவதற்கான சோப்பு அல்லது சானிடைசர் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago