போலீஸாருக்கு கரோனா தொற்று: பிரத்யேக பரிசோதனை மையங்கள் அமைக்க டெல்லி ஆளுநர் உத்தரவு

By செய்திப்பிரிவு

டெல்லியில் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காகவே பிரத்யேக சோதனை மையங்களை அமைக்க வேண்டும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் தலைமையகத்தில் தங்கியவர்கள் மார்ச் 31 வரை 4 தினங்களாக வெளியேற்றப்பட்டனர். கரோனா மருத்துவ பரிசோதனைக்காக அவர்களது பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார் ஈடுபட்டனர்.

இவர்களுடன் டெல்லியின் சுகாதாரப் பணியாளர்களும் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களையும் டெல்லி போலீஸார் கண்டறிந்து கரோனா பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்தனர். இதுபோல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்துள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காகவே பிரத்யேக சோதனை மையங்களை அமைக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிக்கும் போர் வீரர்களாக போலீஸார் உள்ளனர். இந்த சூழலில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பும், தடுப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்வது அவசியம், எனவே இதற்கு மாநில அரசு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அனில் பைஜால் கூறியுள்ளார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்