கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்தது: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து துறை உற்பத்திகளும் பாதிக்கப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் கடுமையாக குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் இந்தியா முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு, அனைத்து உற்பத்திகள், இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியில் வருவதை அனுமதிக்காத நிலை இந்தியா முழுதும் உள்ளது.

144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியையும் பாதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“கச்சா எண்ணெய்

2020 மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2697.42 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) அளவாக இருந்தது. இது இலக்கைக் காட்டிலும் 13.97 சதவீதம் குறைவு, 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.50 சதவீதம் குறைவு.

2019-20இல் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 32169.27 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) ஆக இருந்தது. இது இலக்கைவிட 8.20 சதவீதம் குறைவு, முந்தைய ஆண்டைவிட 5.95 சதவீதம் குறைவு.

இயற்கை எரிவாயு

2020 மார்ச் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2411.16 MMSCM (Million Metric Standard Cubic Meters) அளவாக இருந்தது. இது மாதத்திற்கான இலக்கைவிட 21.89 சதவீதம் குறைவு. 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.38 சதவீதம் குறைவு.
2019-20ல் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த உற்பத்தி 31179.96 MMSCM (Million Metric Standard Cubic Meters) ஆக இருந்தது. இது இலக்கைவிட 9.76 சதவீதம் குறைவாகவும், முந்தைய ஆண்டைவிட 5.15 சதவீதம் குறைவாகவும் இருந்தது.

சுத்திகரிப்பு உற்பத்தி (சுத்திகரிப்பு செய்த கச்சா எண்ணெய் அளவின் அடிப்படையில்)

2020 மார்ச் மாதத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட எண்ணெயின் அளவு 21203.58 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 8.59 சதவீதம் குறைவு. 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.74 சதவீதம் குறைவு. 2019 - 20 ல் ஏப்ரல்

முதல் மார்ச் வரையிலான காலத்தில் சுத்திகரிப்பு அளவு 254385.82ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது இலக்கைவிட 0.14 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டைவிட 1.1 சதவீதம் குறைவு”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்