வாங்க ஆளில்லாமல் அறுவடைக்கு தயாராக 2 லட்சம் டன்கள் வாழை: கேரள அரசே கொள்முதல் செய்து விற்பனை

By செய்திப்பிரிவு

கேரளாவில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதால் அதனை மாநில அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் யாருமில்லை. வயலுக்கு செல்வோரும் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளால் வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

விவசாயப் பணிகளுக்கு தடையில்லை என்றபோதிலும் அதனை செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அறுவை செய்த விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதிலும் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் கேரளாவில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதால் அதனை மாநில அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி வயநாடு மாவட்டத்தில் சுமார் 8700 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை கேரள மாநில தோட்டக்கலைத்துறையினர் கொள்முதல் செய்து வருகின்றனர். சுமார் 2 லட்சம் டன்கள் வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதனை கொள்முதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்