போராட்டத்தை திரும்பப் பெற்றது மருத்துவர் சங்கம்: மத்திய அரசின் உறுதி மொழியை ஏற்று நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர்களின் உறுதிமொழியைத் தொடர்ந்தும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை எந்தவித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்வதற்காக தாங்கள் முன்மொழிந்த போராட்டத்தை இந்திய மருத்துவக் கழகம் திரும்ப பெற்றுக் கொண்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் இன்று டெல்லியில் இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) மருத்துவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது அமித் ஷா கூறியதாவது:

மருத்துவர்களின் வழக்கமான பணியையும் குறிப்பாக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பணியும் போற்றத்தக்கது. இதுவரையிலும் மருத்துவர்கள் பணியாற்றி வந்தது போலவே இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
கரோனா போன்ற உயிர்கொல்லி நோய்களில் இருந்து மக்களை காப்பதில் மருத்துவர்களின் தியாகங்களை பாராட்டுகிறேன்.

கரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் கவனித்து தீர்த்து வைப்பதோடு மத்திய அரசாங்கம் மருத்துவ பணியாளர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும்.

சுகாதாரப் பணியாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது.
மருத்துவர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் பிரதமர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எதிர்காலத்தில் இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மருத்துவர்கள் தாங்கள் தெரிவித்துள்ளபடி குறிப்பால் உணர்த்தும் சிறிய அளவிலான போராட்டத்தை மேற்கொள்வது என்பதுகூட தேசிய அல்லது சர்வதேச நலனுக்கு ஏற்றது அல்ல என்பதால் அத்தகைய போராட்டங்கள் வேண்டாம்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.

இதை்தொடர்ந்து மத்திய அரசின் உயர்நிலை அளவிலான உத்தரவாதத்தை தொடர்ந்தும் மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர்களின் உறுதிமொழியைத் தொடர்ந்தும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை எந்தவித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்வதற்காக தாங்கள் முன்மொழிந்த போராட்டத்தை இந்திய மருத்துவக் கழகம் திரும்ப பெற்றுக் கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்