குறைந்த விலையில் மருந்துகளைத் தயாரித்து உலகிற்கு அளிக்கும் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கரோனா வைரஸ் ஒழிப்பிலும் பெரிய அளவில் பங்களிப்பு செய்யும் என்றும் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் மக்களுக்கு இந்திய நிறுவனங்களின் மருந்துகள் பெரிய அளவில் உதவிபுரியும் என்றும் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்ஜித் சிங் சாந்து, இந்தியாவும் அமெரிக்காவும் உலக ராணுவக் கூட்டாளிகள் போல் கரோன் ஒழிப்பிலும் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்துக்கான தேவை அதிகரித்து இந்தியா 50 நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்துள்ளது, ஆனால் அதனை போதிய ஆதாரம் இல்லாமல் பயன்படுத்தியதாலும் வென்ட்டிலேட்டர்கள் தேவையை நோயாளிகளுக்குக் குறைக்கிறது என்ற தவறான கணிப்பினாலும் அமெரிக்காவில் சிலபல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக என்.ஐ.எச் என்ற அமெரிக்க ஸ்தாபனம் எச்சரித்துள்ளது..
இந்நிலையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சாந்து கூறும்போது, “இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய குறைந்த விலை மருந்து உற்பத்தியில் உலக முன்னணியில் உள்ளனவாகும். கொள்ளை நோயை எதிர்த்து இந்த நிறுவனங்கள் முக்கிய பங்காற்றவிருக்கின்றன.
உண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் தீவிரமான கூட்டுறவை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கூட்டுறவுதான் இந்த மரண வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானது.
இருதரப்பு உறவுகளின் வெற்றிகரமான கைகோர்ப்பின் கண்ணுக்குத் தெரிந்த உதாரணம் ரோடாவைரஸ் வாக்சைன் தயாரிப்புதான். இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது.
ரோடா வைரஸ் என்பது இளம் குழந்தைகளின் தீவிர வயிற்றுப் போக்குக்கு எதிரான வாக்சைன் ஆகும். நமது ஐசிஎம்ஆர் உள்ளிட்ட அறிவியல் ஆய்வுக் கழகங்கள், அமெரிக்க தேசிய சுகாதார கழகம் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தொடர்பில்தான் இருக்கின்றன. இது நமது நீண்ட நாளைய ஒத்துழைப்பின் அங்கமாகும். இந்த கரோனா காலத்தில் இந்தக்க் கூட்டுறவு மிகுதியாக ஆற்றல் பெறுகிறது.
இந்திய அமெரிக்க நிறுவனங்கள் வாக்சைன் தயாரிப்புகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க-இந்திய அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியம் அறிவியலாளர்கள் இணைவதற்கான முன்மொழிவுகளை அறிவித்துள்ளது , இதன் மூலம் இணைந்த ஆராய்ச்சி சாத்தியமாகும்.
கோவிட்-19க்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அசாதாரணமான ஜி-20 மாநாட்டை நடத்தி ஜி-20 நாடுகளை இந்த கரோனா போரில் கூட்டிணைந்து செயல்பட அழைப்பு விடுத்ததையும் நாம் நல்ல முயற்சியாகப் பார்க்க வேண்டும்” என்றார் சாந்து.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago