உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை மறைவு: லாக்டவுனுக்கு மதிப்பளித்து இறுதிச்சடங்கு செய்யாமல் அலுவலகப் பணியைத் தொடர்ந்தார்; தாய்க்கு உருக்கமான கடிதம்

By பிடிஐ


உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். நாடுமுழுவதும் லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு கூட செய்யாமல் வழக்கம் போல் அலுவலகப்பணியை ஆதித்யநாத் தொடர்ந்தார்.

உத்தரப்பிரதேச முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவரின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் மாவட்டம் புல்சாட்டி கிராமமாகும். சிறுவயதிலியே குடும்பத்தைப் பிரிந்த ஆதித்யநாத் உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரக்பூர் மடத்தில் கடந்த1994-ம் சேர்ந்து சன்யாசம் பெற்றார். அதன்பின் அரசியலில் ஈடுபட்டு 5 முறை எம்.பியாக இருந்து தற்போது மாநில முதல்வராக ஆதித்யநாத் இருந்து வருகிறார்

ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங் பிஸ்த்(வயது89) முதுமை மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். ஆனால்,சிகிச்சை பலனின்றி 20-ம் தேதி மாலை உயிரிழந்தார்.

ஆதித்யநாத், அவரின் தந்தை ஆனந்த் சிங் பிஸ்த்

அந்த நேரத்தில் உ.பி தலைநகர் லக்னோவில் ஆதித்யநாத் அதிகாரிகளுடன் கரோனா வைரஸ் தடுப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அதிகாரிகள் மூலம் தனது தந்தை மறைவு செய்தியை ஆதித்யநாத் அறிந்தார். ஆனால் உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை முடிக்காமல், 2 நிமிங்கள் மவுனமாக இருந்துவிட்டு மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தைத் தொடர்ந்தார்

நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது, உ.பியில் கரோனா வைராஸல் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் மாநில நலன் கருதியும், ஊரடங்கை மதித்தும் அவர் தந்தையின் இறுதிச்சடங்கு ஆதி்த்யநாத் செல்லவில்லை.

ஆதித்யநாத் வரமுடியாத சூழல் அவரின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதித்யநாத் மூத்த சகோதரர் மன்வேந்திர சிங் புல்செட்டி கிராமத்தில் தந்தைக்கு இறுச்சடங்கு செய்து உடலை தகனம் செய்தார்.

இறுதிச்சடங்கு நேற்று நடந்த போது ஆதித்யநாத் அதில் பங்கேற்காமல் லக்னோவில் தனது இல்லத்தில் இரு நிமிடங்கள் மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு தனது பணியை வழக்கம் போல் தொடர்ந்தார்.

உத்தரகாண்டில் நடந்த இறுதிச்சடங்கில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சபாநாயகர் பிரேம்சந்த் அகர்வால், அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் பங்கேற்றனர்.

ஆதித்யநாத் தலைமை அறங்காவலாரக இருக்கும் உ.பி . மாநிலம் கோரக்நாத் கோயிலிலும் நிர்வாகிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள் அனைவரும் 2நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் “ தந்தையின் இறுதிச்சடங்கில் நான் பங்கேற்காமல் போனதற்கு என்ன மன்னிக்கவும். கடினமான உழைப்பு, நேர்மை, சுயநலமின்மை, மக்களுக்கு உதவி செய்தல் போன்ற நல்ல பழக்கங்கள் என் தந்தை எனக்கு போதித்தார். அவர் இறக்கும் முன் நான் கடைசியாக பார்்க்க ஆசைப்பட்டேன்.

ஆனால் எனது பணிச்சூழல் அவரைச் சந்திக்க முடியவில்லை. அதிலும் கரோனா வைரஸ் காரணமாக 23 கோடி மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனுக்கு மதிப்பளித்து என்னால் தந்தையின் இறுதி்ச்சடங்கிலும் பங்கேற்க முடியவில்லை. என் பூர்வஜென்மத்து பலனாக உங்களுக்கு பிறந்தேன். லாக்டவுன் நீக்கப்பட்டபின்புதான் உங்களையும், குடும்பத்தாரையும் சந்திக்க முடியும் என்ற சூழலில் இருக்கிறேன். மன்னிக்கவும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்